• பெண்கல்விக்கு முன்னுரிமை
  கொடுப்போம் !
  முழுமையான சுதந்திரத்திற்கு
  வழிவகுப்போம் !
 • பாலின பாகுபாட்டை வேரறுப்போம் !
  சமத்துவமே மனித இனத்தின் மகத்துவம் !
 • பாலியல்பை புரிந்து கொள்வோம் !
  பாலியல் வன்முறையை ஒழித்திடுவோம் !
பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்வு உரிமைகள்

Sexuality and Reproductive Health Rights(SRHR)

பாலியல்பு & இனப்பெருக்க நலவாழ்வு என்பது...

பாலியல் குறித்த சிந்தனை, மனப்பாங்கு மற்றும் நடத்தைகள் நம் அனைவருக்கும் இயல்பானவை. பாலியல்பு வெளிப்படையாக பேசக்கூடாத அல்லது அருவருக்கத்தக்க விசயம் அல்ல. இது மனித வாழ்வின் தொடர்ச்சிக்கு அடிப்படையானது ஆகும்.

இனப்பெருக்க நலவாழ்வு என்பது நோயின்றி அல்லது உறுப்புகள் குறைபாடின்றி வாழ்வது மட்டுமல்ல; முழுமையான உடல், மனம் மற்றும் சமூக வளர்ச்சியையும், செயல் திறனையும் பெற்றிருத்தல் ஆகும். அரசின் சட்டத்திற்கும் உட்பட்டு தம்பதியினர் எவ்வித நிர்பந்தமும் இன்றி குழந்தை பெற்றுக்கொள்வது அதற்கான கால இடைவெளியை முடிவு செய்வது சுகாதாரமான வகையில் விரும்பிய குழந்தையை பெற்றெடுத்து பாதுகாப்பாக வளர்ப்பதையும் உள்ளடக்கியதாகும்.

பிரச்சனையின் பின்னணி:-

பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்வில் முழுமை அடையாத சிலர் மற்றவர்களை தரக்குறைவாக நடத்துதல், வக்கிரமான பாலியல் செயல்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட சமூகத்திற்கு எதிரான நடத்தையுடன் காணப்படுகின்றனர்.

ஓரளவு படிப்பறிவும், அனுபவ அறிவுமுள்ள மக்கள் மத்தியில் கூட பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்வு குறித்த அக்கறையும் விழிப்புணர்வும் இல்லாத நிலை காணப்படுகிறது.

மேலும், பல்வேறு சமூக பின்னணிகளை உடைய மக்களின் கலாச்சார முரண்பாடுகள், ஊடகங்கள் மக்களின் சிந்தனையில் உருவாக்கும் எதிர்மறை தாக்கம், முறையான பாலியல் கல்வியின்மை ஆகியவை மக்களிடையே பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இதனால் மக்களிடையே ஏற்படும் குழப்பமான மனநிலை அவர்களை ஆரோக்கியமற்ற பாலியல் செயல்களையும், வழிமுறைகளையும் பின்பற்ற தூண்டுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்வு உரிமைகள் பற்றி தெளிவான கருத்துக்களை நேரடியாகவும், ஊடகங்கள் மூலமாகவும் மக்கள் மத்தியில் பரப்புரை செய்வது அவசியமான ஒன்றாகும்.

SRHR திட்டத்தின் நோக்கங்கள்...

அவினாசி மற்றும் திருப்பூர் வட்டத்தில் தேர்தெடுக்கப்பட்ட இலக்கு பகுதியில் உள்ள சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பாலியல்பை தமது நலமான வாழ்க்கையின் ஒரு முக்கிய பகுதியே என்பதனை அங்கீகரிக்கச் செய்தல்.

அவர்கள் தமது எதிர்பாலினத்தினரின் பாலியல் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, ஆரோக்கியம் நிறைந்த இனப்பெருக்க நல்வாழ்வுக்கான இனிய நடத்தையை பின்பற்றச் செய்தல்.

இலக்கை அடைவதற்கான உத்திகள்...

இலக்கு பகுதியிலுள்ள வளரிளம் பருவத்தினர், இளைஞர்கள் மற்றும் பெற்றோர்களிடைய 'தோழமை குழுக்கள்' (Peer Buddies) மூலமாக விழிப்புணர்வு அடையச் செய்தல். அவர்கள் வழியாக பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்வு உரிமைகளை மேம்படுத்துவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்தல்.

விழிப்புணர்வுக் கல்வி, தகவல் பரிமாற்றம் மற்றும் முறையான அணுகுமுறை ஆகியவற்றின் மூலமாக இலக்கு மக்களின் பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்வு உரிமைகளின் மேம்பாட்டிற்கு தடையாக இருக்க கூடிய பிற்போக்கான எண்ணங்கள், நம்பிக்கைகள் மற்றும் சமூக முரண்பாடுகளை அகற்றுதல்.

பாலியல்பு மற்றும் இனப்பெருக்க நலவாழ்விற்கான சேவை அளிப்போர் மத்தியில் இவை தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வலியுறுத்துவதன் மூலமாக அவர்கள் தமது பணியில் ஓர் அங்கமாக இலக்கு மக்கள் மத்தியில் மேம்பட்ட நல்கல்வி மற்றும் சேவையை ஆர்வமுடன் மேற்கொள்ளச் செய்தல்.

செயல்திட்டங்கள்:

இவை தொடர்பான அடிப்படை தகவல்களை சேகரித்தல், ஆய்வுகளை செய்தல், ஆவணப்படுத்துதல், திறன் மேம்பாட்டுப்பயிற்சிகள், கைப்பேசி மற்றும் இணையதளம் வழியாக விழ்ப்புனர்வு அளித்தல், இளையோருக்கான நலவாழ்வு முகாம்கள், விழிப்புணர்வு மற்றும் பிரச்சார செயல்பாடுகள், கண்காட்சி, வீதிநாடகங்கள் மற்றும் சிறப்பு தினங்களை கடைபிடித்தல் ஆகிய பல்வேறு நடவடிக்கைகளை எமது செயல்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

ஒளி காட்சியகம்

Android Application

Download At Play Store